தில்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் நாளையும் (நவ. 12) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணமாகவே ரயில் நிலைய சேவை நிறுத்திவைக்கப்படுவதாகவும், தில்லியிலுள்ள மற்ற மெட்ரோ ரயில் நிலையங்கள் வழக்கம்போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாதுகாப்பு காரணங்களுக்காக தில்லி லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் நாளையும் செயல்படாது. ஆனால், மற்ற மெட்ரோ நிலையங்கள் வழக்கம்போல செயல்படும். மேற்கொண்டு தகவல்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே நேற்று மாலை 6.50 மணியளவில் கார் வெடித்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, இந்த சம்பவம் குறித்து தில்லி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிகார் பேரவைத் தேர்தல்! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.