மும்பையில் இருந்து வாரணாசி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தின் மும்பையில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு இன்று (நவ. 12) மதியம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 182 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது.
இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள விமான கட்டுப்பாட்டு மையம், மாலை 3.58 மணியளவில் மும்பையில் இருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக, வாரணாசி விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வாரணாசியின் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு விமான நிலையத்தில், மாலை 4.19 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கியதும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இத்துடன், விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணிகளிடமும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனைகளின் முடிவில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த மிரட்டல் போலியானது என காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதையும் படிக்க: இந்திய - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் உரையாடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.