உத்தரப் பிரதேசத்தின் ஹாபூரில் இரண்டு தனித்தனி இடங்களிலிருந்து 46 கிலோ ஹைட்ரோஃப்ளூரிக் அமிலம் மற்றும் 2.5 கிலோ வெடிபொருள்களை அனுமதியின்றி எடுத்துச் சென்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தில்லி கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஹாபூரில் வெடிபொருள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தில்லி குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் ஃபரிதாபாத் பயங்கரவாத தொகுதியில் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதற்கும் ஏதேனும் தொடர்வு உள்ளதா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை மாலை வழக்கமான சோதனையின் போது பில்குவா பகுதியில் உள்ள ஹினாலாபூர் பாம்பா கல்வெர்ட் அருகே நின்ற ஒருவரை போலீஸார் தடுத்து நிறுத்தியதாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வினீத் பட்நாகர் தெரிவித்தார்.
பிடிபட்டவர் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள காந்த் பகுதியைச் சேர்ந்த ஷோயிப் என அடையாளம் காணப்பட்டது. அவர் பெரிய பிளாஸ்டிக் கேனை எடுத்துச் சென்று கொண்டிருந்தார்.
விசாரணையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து எந்த ஆவணங்களும் அனுமதியும் இல்லாமல் வாங்கிய கன்டெய்னரில் 38 கிலோ ஹைட்ரோஃப்ளூரிக் அமிலம் இருந்ததாக அவர் போலீஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரது பதில்கள் முரண்பாடாக இருந்ததால், விரிவான விசாரணைக்காக நடத்தப்பட்டு வருகின்றது.
ஹைட்ரோஃப்ளூரிக் அமிலம் என்பது மிகவும் அரிக்கும் தன்மை கொண்ட தொழில்துறை அமிலமாகும்,இது முக்கியமாகச் சுத்தம் செய்தல் மற்றும் ஃப்ளோரினேஷன் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இது மிகவும் ஆபத்தானது பல இடங்களில் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
புதன்கிழமை காலை, அதே பகுதியில் உள்ள பரதப்பூர் கிராசிங்கில் வாகனங்களைச் சோதனை செய்த ஒரு போலீஸார் குழு பைகளுடன் நடந்து சென்ற இரண்டு பேரைக் கைது செய்தது. பைகளை ஆய்வு செய்ததில் 2.5 கிலோ வெடிக்கும் பொருள்கள் மீட்கப்பட்டனர்.
இருவரும் சீதாபூரைச் சேர்ந்த ஷோபித் குமார் மற்றும் விஜேந்திர சிங் என அடையாளம் காணப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக நவம்பர் 10 ஆம் தேதி, செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்துச் சிதறியதில், 12 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
கார் வெடிப்பு, சில நாள்களுக்கு முன்பு ஃபரிதாபாத்தில் 350 கிலோவுக்கு மேல் சந்தேகிக்கப்படும் அமோனியம் நைட்ரேட் உள்பட சுமார் 2,900 கிலோ வெடிபொருள்கள் பிடிபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.