தில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு, ஒரு 'பயங்கரவாதத் தாக்குதல்' என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
தில்லி செங்கோட்டை அருகே நவ. 10(திங்கள்கிழமை) மாலை, சிக்னல் அருகே நின்ற கார் வெடித்துச் சிதறியதில் 12 பேர் உயிரிழந்தனர். இன்று மேலும் ஒருவர் பலியான நிலையில் உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லி செங்கோட்டை அருகே நடந்தது 'பயங்கரவாத செயல்'(terror incident) என்று மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ,
"தில்லியில் நடந்த குண்டுவெடிப்பு 'பயங்கரவாதத் தாக்குதல்'(terror attack) என்று தெளிவாகத் தெரிகிறது. இந்தியர்களைப் பாராட்ட வேண்டும். ஏனெனில் இந்த விசாரணையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் எச்சரிக்கையாகவும் கைதேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல்தான். வெடி பொருள்கள் நிரப்பப்பட்ட ஒரு கார் வெடித்துச் சிதறி பலர் இறந்துள்ளனர்.
இந்திய அமைப்புகள் விசாரணையை சரியாகச் செய்கிறார்கள். அவர்களிடம் உண்மையான ஆதாரங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் அதை வெளியிடுவார்கள்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இதுகுறித்துப் பேசினேன். நாங்கள் இந்தியாவுக்கு உதவ முன்வந்தோம். ஆனால் இந்த விசாரணை தொடர்பாக இந்தியர்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இதனை எதிர்கொள்ளும் திறமை அவர்களுக்கு இருக்கிறது" என்று கூறினார்.
இதையும் படிக்க | தில்லி கார் வெடிப்பு: யார் இந்த உமர் முகமது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.