உக்ரைனுக்கு விரைவில் நல்ல செய்தி! ஸெலென்ஸ்கி - அமெரிக்க அமைச்சர் சந்திப்பின் பின்னணி
உக்ரைனில் போர் நிறுத்தம்: டிரம்ப் உறுதி! ஸெலென்ஸ்கி - அமெரிக்க அமைச்சர் சந்திப்பின் பின்னணி
முனிச் : ஜெர்மனியில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கியும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்தச் சந்திப்பு குறித்து தமது எக்ஸ் தளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை(பிப். 15) பதிவிட்டுள்ள ரூபியோ, உக்ரைனின் தேசப் பாதுகாப்பு குறித்தும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு துறைகளில் பங்களிப்பை வலுப்படுத்துவது குறித்தும் uக்ரைன் அதிபருடன் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ரத்தம் சிந்தப்படுவது தடுத்து நிறுத்தப்படுவதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்துவதில் அதிபர் டிரம்ப் முனைப்புடன் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்கா முன்னெடுத்துள்ள மத்தியஸ்த பேச்சுவார்த்தை ஜெனீவாவில் பிப். 17 - 18 நடைபெற உள்ளது. அதில், உக்ரைன், ரஷியா மற்றும் அமெரிக்கா பங்கேற்கும். இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில், உக்ரைன் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Advertisement
Advertisement
US Secretary of State Marco Rubio meets Ukrainian President Volodymyr Zelenskyy at Munich Security Conference
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.