தில்லி குண்டுவெடிப்பின்போது கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்தான், மும்பையிலும் 5 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டது.
தில்லி குண்டுவெடிப்புக்கு முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியாணா காவல்துறையால் 2,900 கிலோ அம்மோனியம் நைட்ரேட், டெட்டனேட்டர்கள், டைமர்கள், தாக்குதல் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
அதுமட்டுமின்றி, இதே வெடிபொருளைக் கொண்டுதான் மும்பையில் 2002 முதல் 2011 இடையில் 5 குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காட்கோபர் பெஸ்ட் பேருந்து குண்டுவெடிப்பு, வொய்ல் பார்லே சந்தை குண்டுவெடிப்பு, முலுண்ட் ரயிலின் பெண்கள் பெட்டியில் குண்டுவெடிப்பு, மேற்கு ரயில்வே பாதையில் தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் ஜவேரி பஜார், ஓபரா ஹவுஸ், தாதர் ஆகிய பகுதிகளில் குண்டுவெடிப்புகள் என மொத்தம் 5 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 240-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதையும் படிக்க: தில்லி குண்டுவெடிப்பு! உளவுத் துறை தோல்வி, அமித் ஷா பொறுப்பேற்பாரா? காங்கிரஸ் கேள்வி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.