பிகார் பேரவைத் தேர்தலில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது.
இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது.
கடந்த 2020 தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி 203 இடங்களில் வெற்றி/முன்னிலை பெற்று மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு கடந்த நவ. 6, 11-இல் இரு கட்டங்களாக (121, 122) தோ்தல் நடைபெற்றது.
இதில் வரலாறு காணாத அளவில் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 29, மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 6, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோா்ச்சா 6 இடங்களில் போட்டியிட்டன.
எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.