முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் வெள்ளிக்கிழமை காலை மரியாதை செலுத்தினார்கள்.
நாட்டின் முதல் பிரதமரான மறைந்த நேருவின் பிறந்த நாள் விழா, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், தில்லி ராஜ பாதையில் உள்ள நேருவின் நினைவிடத்தில், அவரது பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி இன்று மரியாதை செலுத்தினர்.
மேலும், இந்த நிகழ்வில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.