ஜம்மு - காஷ்மீர் இடைத்தேர்தலில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி இரு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
நக்ரோட்டாவில், பாஜகவின் தேவயானி ராணா 24,647 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பட்காமில், பிடிபியின் ஆகா சையது முனாசிர் மெஹ்தி 4,478 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதேசமயம், பாஜக வேட்பாளர் ஆகா சையத் மொஹ்சின் 2,619 வாக்குகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.
2024 தேர்தலில் இரு தொகுதிகளில் வென்ற முதல்வர் ஒமர் அப்துல்லா, பட்காம் தொகுதியை ராஜிநாமா செய்த நிலையில், அந்த தொகுதியை பிடிபி கட்சி கைப்பற்றியுள்ளது.
1972 க்குப் பிறகு பட்காம் தொகுதியை தேசிய மாநாட்டுக் கட்சி முதல் முறையாக இழந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
முன்னதாக ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 2 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.