மஹுவா தொகுதியில் தொகுதியில் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
18வது சுற்று முடிவில் அவர் 25,474 வாக்குகளைப் பெற்று 3ஆவது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) சிங் 63,117 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அதைத் தொடர்ந்து ஆர்ஜேடியின் முகேஷ் குமார் ரௌஷன் (24,480 வாக்குகள்) இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
முன்னதாக பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த மே மாதம் தேஜ் பிரதாப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘ஓா் இளம் பெண்ணுடன் தொடா்பில் இருப்பதாக’ கூறியதுடன், அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா்.
இதையடுத்து, தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக லாலு பிரசாத் அறிவித்தாா். இதனால் ஜனசக்தி ஜனதா தளம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய தேஜ் பிரதாப், மஹுவா தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.