அமெரிக்க பயணத்தின்போது அந்நாட்டின் இந்தோ-பசிபிக் பிரிவு தலைமைத் தளபதி சாமுவல் பாப்பரோவை சந்தித்த இந்திய கடற்படையின் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி. 
இந்தியா

அமெரிக்க கடற்படை அதிகாரிகளுடன் இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆலோசனை

அமெரிக்க கடற்படை அதிகாரிகளுடன் இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆலோசனை

தினமணி செய்திச் சேவை

அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரிகளுடன் இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக இந்திய கடற்படை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஆறு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்டா் சாமுவல் ஜே.பாப்பரோ, அமெரிக்க பசிபிக் கடற்படை கமாண்டா் ஸ்டீபன் டி.கோலா், அமெரிக்க கடற்படை கமாண்டா் ஜேம்ஸ் எஃப்.கிளின் ஆகியோரை சந்தித்தாா். அப்போது இந்தோ பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனையில் ‘மலபாா்’ மற்றும் ‘மிலன்’ ஆகிய இருதரப்பு மற்றும் முத்தரப்பு கடற்படை பயிற்சிகளின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT