ஹைதராபாத்: ஆன்லைன் சூதாட்டச் செயலி வழக்கில், நடிகர் ராணா டகுபதி சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஆஜரானார்.
தெலங்கானாவில், ‘தெலங்கானா விளையாட்டுச் சட்டம், 2017-இன்’ கீழ், அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, சட்ட விரோத ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க, கண்காணிக்க தெலங்கானா மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது.
இதனிடையே, ராணா மட்டுமில்லாது வேறு சில திரைத்துறை, சமூக ஊடகப் பிரபலங்களும் சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்துதல் உள்பட அவற்றுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோத ஆன்லைன் சூதாட்டச் செயலி வழக்கில் ராணாவுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, தெலங்கானா சிஐடியின் ஏடிஜிபி மேற்பார்வையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு முன்பு ராணா சனிக்கிழமை(நவ. 15) ஆஜரானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.