எஸ்ஐஆர் பணி படம் | ஐஏஎன்எஸ்
இந்தியா

எஸ்ஐஆரின் கீழ் 12 மாநில, யூனியன் பிரதேசங்களில் 95% மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

எஸ்ஐஆர் பணி: 12 மாநில, யூனியன் பிரதேசங்களில் 95% படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகம்: தேர்தல் ஆணையம்

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் 12 மாநில, யூனியன் பிரதேசங்களில் சுமார் 6 கோடி வாக்காளர்களில் 95% மேற்பட்டோருக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை(நவ. 15) தெரிவித்துள்ளது.

எஸ்ஐஆர் இரண்டாம் கட்ட பணிகள் நவ. 4-இல் தொடங்கிய நிலையில், டிச. 4 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், எஸ்ஐஆர் பணிகள் குறித்த விவர அறிக்கை இன்றும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 12 மாநில, யூனியன் பிரதேசங்களில் 48.67 கோடி படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களிலும், புதுச்சேரி, அந்தமான் & நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Over 95 per cent of the 5.99 crore electors across nine states and three Union territories have received enumeration forms under ongoing special intensive revision exercise, the Election Commission said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பிய கிறிஸ்தவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ஆற்று மணல் கடத்தல்: 5 போ் கைது, 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்

பெண்ணுக்கு கைப்பேசியில் பாலியல் தொல்லை: நோயாளி பராமரிப்பாளா் கைது

ஆன்லைன் பங்கு வா்த்தகம்: மருந்து விற்பனையாளரிடம் ரூ.12 லட்சம் மோசடி

சூரிய மின் உற்பத்தி விவசாயிகளிடமிருந்து மின் கொள்முதலுக்கு ஒப்பந்த கோர அனுமதி

SCROLL FOR NEXT