அரசியல் வாழ்வில், வெற்றி - தோல்வி என்பது தவிர்க்க முடியாதது என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகாரில் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார்.
பிகாரில் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற நிலையில், படுதோல்வியைச் சந்தித்ததால் விரக்தி அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேஜஸ்வி யாதவ் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், அரசியல் வாழ்க்கையில், வெற்றி - தோல்வி என்பது தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் ஹிந்தியில் தன்னுடைய கருத்தைப் பாகிர்ந்துள்ளார். அதாவது, பொது வாழ்க்கை என்பது இடைவிடாமல், முடிவே இல்லாமல் பயணிப்பது போன்றது. இதில் வெற்றி மற்றும் தோல்வியை தவிர்க்க முடியாது. தோல்வியடையும் போது விரக்தி அடைவதோ வெற்றியடையும்போது மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதோ கூடாது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி என்பது எப்போதும் ஏழைகளுக்கான கட்சி, அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
பிகார் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 தொகுதிகளில் வென்று படுதோல்வியை சந்தித்துள்ளது. பாஜகவோ இதுவரை இல்லாத வகையில் 89 தொகுதிகளில் வென்றுள்ளது. நிதீஷ் குமாரின் ஜனதா தளம் 85 இடங்களிலும், சிராக் பாஸ்வான் கட்சி 19 தொகுதிகளிலும் வென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.