காங்கிரஸிடம் பாஜக மன்னிப்புக் கேட்பதுபோல் கடிதம் வெளியிட்டு டிரெண்டிங்கில் இணைந்துள்ளது.
இணையத்தில் சமீபமாக, பல்வேறு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதுவதுபோல டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனை ஒரு விளம்பர உத்தியாக பல்வேறு நிறுவனங்களும் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த டிரெண்டிங்கில் பாஜகவும் இணைந்துள்ளது.
பிகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், காங்கிரஸிடம் மன்னிப்பு கேட்பதுபோல பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
பாஜகவின் மன்னிப்புக் கடிதத்தில், ``ஹரியாணா, மகாராஷ்டிரம், தில்லி மற்றும் இப்போது பிகாரில் தோற்கடிக்கப்பட்டதற்காக காங்கிரஸ் கட்சிக்கும், அவர்களின் இந்தியா கூட்டணிக்கும் எங்கள் மன்னிப்பை மனதாரத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்களின் நலனுக்காக இந்த டிரெண்டிங்கை தொடரவும், மாநிலவாரியாக உங்களைத் தோற்கடிக்கவும் பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் உறுதிபூண்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பிகார் தேர்தலில் உலக வங்கியின் ரூ. 14,000 கோடி: புள்ளிவிவரங்களுடன் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.