கார் வெடித்ததில் தீக்கிரையான வாகனங்கள் படம் - பிடிஐ
இந்தியா

தில்லி கார் வெடிப்பு: தற்கொலைப் படைத் தாக்குதல் - என்ஐஏ அறிவிப்பு

தில்லி கார் வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படைத் தாக்குதல் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி கார் வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படைத் தாக்குதல் என தேசிய புலனாய்வு முகமை இன்று (நவ. 16) அறிவித்தது.

மேலும், கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமாகக் கருதப்படும் உமர் முகமது, காரை வாங்குவதற்கு உதவிய அமீர் ரஷித் அலி என்பவரையும் அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட கார் அமீர் ரஷித் அலியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் என்ஐஏ குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அமீர் ரஷித் அலி, உமர் முகமதுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளதாகவும், தாக்குதல் நடத்துவதற்கான ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்தும், சம்பவத்தற்கு அங்கிருந்தவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் தில்லி கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது. மத்திய அரசும் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்தது.

இந்நிலையில், இச்சம்பவத்தை தற்கொலைப்படைத் தாக்குதல் என என்ஐஏ இன்று அறிவித்துள்ளது. மேலும், வெடித்துச் சிதறிய காரை ஓட்டிச்சென்ற உமர் முகமதுவுக்கு நெருக்கமாக செயல்பட்டு வந்த அமீர் ரஷித் அலி என்பவரையும் தில்லியில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தற்கொலைப்படை தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார், இவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர் ஜம்மு - காஷ்மீரின் பாம்போர் பகுதியில் வசித்து வருபவர். இவர் புல்வாமா பகுதியில் இருந்த உமருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். தில்லி சென்று காரை வாங்கி உமரிடம் கொடுத்ததும் அமீர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், உமருக்குச் சொந்தமான மற்றொரு வாகனத்தையும் விசாரணை அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். இதோடு மட்டுமின்றி சம்பவத்தின்போது காயமடைந்தவர்கள் உள்பட 73 பேரிடம் இதுவரை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் மாநில காவல் துறையின் உதவியுடன் என்ஐஏ தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சகோதரியை இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது: லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ்

delhi car blast Case with Arrest of Suicide Bomber’s Aide NIA

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் அருகே சிலம்பப் போட்டிகள்

மனைவிக்கு கொடுமை: கணவன் உள்பட 3 போ் மீது வழக்கு

ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

லாலு குடும்பத்துக்குள் தீவிரமடையும் சச்சரவு! தேஜஸ்வி மீது சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் பாஜகவின் வேகம் குறையவில்லை: கே.பி.ராமலிங்கம்

SCROLL FOR NEXT