வரும் ஆண்டுகளில் டெலிவரி ஊழியர்களின் வேலைவாய்ப்பை டிரோன்கள் பறிக்கும் அபாயம் இருப்பதாக தொழிற்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
உலகம் முழுவதும் வேலைவாய்ப்பின்மை தற்போது பெருகி வருகிறது. செய்யறிவு பயன்பாடு, செலவுகளைக் குறைத்தல் முதலிய காரணங்களைக் காட்டி, ஊழியர்களை பல்வேறு நிறுவனங்கள் பணியிழக்கச் செய்து வருகின்றனர். இதனால், பலரும் சுயாதீனமாக டெலிவரி, ஃப்ரீலேன்ஸ், டேட்டா என்ட்ரி, யூடியூபர் (Gig workers) தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.
நாடு முழுவதும் தற்போது சுமார் 1.2 கோடி கிக் ஊழியர்கள் உள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 2.35 கோடியாக அதிகரிக்கலாம். கிக் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமோ, காப்பீடோ, விடுப்போ என எதுவும் இல்லை. இவர்களுக்கென இருக்கும் உரிமைகள், சலுகைகள், வாய்ப்பு குறித்து பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
இந்த நிலையில், டெலிவரி ஊழியர்களுக்கும் வரும் ஆண்டுகளில் வேலையின்மை ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தில்லியில் ஒரு பொருளை டெலிவரி செய்வதற்கு ஊழியர்களுக்குப் பதிலாக டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
டெலிவரி ஊழியர்கள், முதல் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ. 15 மற்றும் அடுத்தடுத்த தொலைவுகளில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ. 10 முதல் ரூ. 14 வாங்குகின்றனர். ஆனால், டிரோன்கள் மூலம் டெலிவரிக்கு ஒரு கி.மீ. தொலைவுக்கு வெறும் ரூ. 4 மட்டுமே வாங்கப்படுகிறது. டிரோன் டெலிவரியில் நேரமும் குறைகிறது.
அதுமட்டுமின்றி, டிரோன்கள் ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருப்பதால், டெலிவரி நிறுவனங்களால் டிரோன்களை எளிதில் வாங்கவும் முடிகிறது.
இதையும் படிக்க: எலான் மஸ்க் கண் இமைத்தால் ரூ. 2.6 லட்சம் சம்பளம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.