யோகேஷ் ஷீர்சாகர் instagram.com/yogeshkshirsagar_/
இந்தியா

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங். தலைவர் பாஜகவில் ஐக்கியம்!

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங். தலைவர் பாஜகவில் ஐக்கியம்!

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் யோகேஷ் ஷீர்சாகர் பாஜகவில் இணைந்தார். அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களுள் ஒருவரான யோகேஷ் ஷீர்சாகர் இன்று(நவ. 16) மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் பங்கஜா முண்டே உடனிருந்தார்.

மகாராஷ்டிரத்தின் பீட் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேசியவாத காங்கிரஸின் தலைமை நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்த யோகேஷ் ஷீர்சாகர், தான் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படுவதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, தான் சார்ந்திருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், அவர் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கடந்தாண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பீட் தொகுதி வேட்பாளராக களம் கண்ட யோகேஷ் ஷீர்சாகர் 5,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சார்ந்த யோகேஷ் ஷீர்சாகர் தேசியவாத காங்கிரஸிலிருந்து விலகியிருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

NCP leader Yogesh Kshirsagar on Sunday joined the BJP at a function in Chhatrapati Sambhajinagar in the presence of Maharashtra Chief Minister Devendra Fadnavis and state minister Pankaja Munde.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

ஆஷஸ் தொடரை வென்ற (4-1) ஆஸி..! கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ரசிகர்கள்!

யஷ் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர் வெளியீடு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

ஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள் - 1

SCROLL FOR NEXT