தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இருவர் இன்று (நவ. 17) உயிரிழந்தனர்.
ஏற்கெனவே 13 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே கடந்த 10 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் கடும் நெரிசலுக்கு மத்தியில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இச்சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அரசு சார்பில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 7 நாள்கள் கழித்து இன்று இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | தில்லி கார் வெடிப்பு: அமீர் அலிக்கு 10 நாள் என்ஐஏ காவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.