தில்லியில், 2 மத்திய ரிசர்வ் காவல் படையின் பள்ளிக்கூடங்கள் மற்றும் 3 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியின், துவாரகா மற்றும் பிரசாந்த் விகார் பகுதிகளில் உள்ள 2 சி.ஆர்.பி.எஃப். பள்ளிக்கூடங்கள் மற்றும் சாகேத், பட்டியாலா, ரோகினி ஆகிய 3 வெவ்வேறு நீதிமன்றங்களுக்கும் இன்று (நவ. 18) காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக பள்ளிக்கூடங்கள் மற்றும் நீதிமன்றங்களில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நீதிமன்றத்தின் பணிகள் மற்றும் விசாரணைகள் சுமார் 2 மணிநேரம் தாமதமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவயிடங்களுக்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், காவல் துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தச் சோதனைகளில், சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததால் இந்த மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளன.
இத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையான தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தில்லியின் செங்கோட்டை அருகில் கடந்த நவ.10 ஆம் தேதி நடந்த கார் வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சவூதி விபத்தில் இறந்தவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.