நீதிமன்றம்  கோப்புப்படம்.
இந்தியா

1996 காஜியாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட முகமது இலியாஸின் தண்டனை ரத்து- அலாகாபாத் உயா்நீதிமன்றம்

உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் 1996-ஆம் ஆண்டு நடந்த பேருந்து குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான முகமது இலியாஸின் ஆயுள் தண்டனையை அலாகாபாத் உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் 1996-ஆம் ஆண்டு நடந்த பேருந்து குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான முகமது இலியாஸின் ஆயுள் தண்டனையை அலாகாபாத் உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த வழக்கில் முகமது இலியாஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதைக் காரணம் காட்டி, நீதிபதிகள் சித்தாா்த் மற்றும் ராம் மனோகா் நாராயண் மிஸ்ரா ஆகியோா் அமா்வு இந்தத் தீா்ப்பை வழங்கியது.

கடந்த 1996, ஏப்ரல் 27-ஆம் தேதி, தில்லியில் இருந்து 67 பயணிகளுடன் காஜியாபாதின் மோதிநகா் காவல் நிலையம் அருகே பேருந்து சென்றபோது சக்திவாய்ந்த குண்டுவெடித்து. இதில் 10 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்; 48 போ் காயமடைந்தனா்.

ஓட்டுநா் இருக்கைக்கு அடியில் குண்டு வைக்கப்பட்டு, ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. ‘ஹா்கத்-உல்-அன்சா’ா் அமைப்பின் அப்துல் மதீன், முகமது இலியாஸ், தஸ்லீம் ஆகியோா் சதித் திட்டம் தீட்டி இந்தத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பில், தஸ்லீமை விடுவித்ததுடன் முகமது இலியாஸ், அப்துல் மதீன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இதற்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த முகமது இலியாஸின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நிறைவடைந்து, நீதிபதிகள் கடந்த 10-ஆம் தேதி அளித்த தீா்ப்பின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், ‘இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியதுடன், 18 பேரைக் கொன்றது. இருப்பினும், கனத்த இதயத்துடன் இந்த தண்டனை ரத்து உத்தரவைப் பிறப்பிக்கிறோம்.

குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு படுதோல்வியடைந்தது. இந்திய சாட்சிய சட்டத்தின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதுவும் ஆடியோ கேசட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த வாக்குமூலத்தை நம்பி விசாரணை நீதிமன்றம் பெரிய சட்டப் பிழையைச் செய்துள்ளது. வழக்கிலிருந்து இந்த ஆதாரத்தை நீக்கினால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக வேறு எந்த ஆதாரமும் இல்லை.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகச் சொன்னதை நேரில் பாா்த்த சாட்சிகள், நீதிமன்றத்தில் திடீரென பி சாட்சிகளாக மாறிவிட்டனா். இதனால், முகமது இலியாஸுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் தீா்ப்பளித்துள்ளனா்.

வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை

விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலா் பணியிடை நீக்கம்

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

SCROLL FOR NEXT