ஆந்திரப் பிரதேசத்தில் காவல்துறையினர் மற்றும் ஒருங்கிணைந்த உளவுத்துறை தலைமையிலான நடவடிக்கைகளில் ஐந்து மாவட்டங்களில் சுமார் 50 சிபிஐ (மாவோஸ்யிட்) கைது செய்ததாக அதிகாரி தெரிவித்தார்.
நவம்பர் 18 அன்று அல்லூரி சீதாராம் ராஜு மாவட்டத்தில் உள்ள மாரேடுமில்லியில் நடந்த என்கவுண்டருடன் இந்த அதிரடி நடவடிக்கையும் நடந்தது. அங்கு நக்சலைட் தளபதி எம். ஹித்மா மற்றும் 5 பேர் கொல்லப்பட்டனர்.
தளபதி ஹித்டத கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஐந்து மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உளவுத்துறை சார்ந்த நடவடிக்கைகளைத் தொடங்கி 50 சிபிஐ மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர் என விஜயவாடாவில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஏடிஜிபி உளவுத்துறை மகேஷ் சந்திர லத்தா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் மாவோயிஸ்ட்களுக்குள் வெவ்வேறு நிலைகளைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர், இதில் சிறப்பு மண்டலக் குழு உறுப்பினர்கள், பிரிவுக் குழு உறுப்பினர்கள், பகுதிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தெற்கு பஸ்தர்-தண்டகாரண்யா பகுதியில் செயல்படும் உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர்.
லத்தாவின் கூற்றுப்படி, சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட விரிவான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் விளைவாகப் பல மாவட்டங்களிலிருந்து 50 மாவோயிஸ்ட் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
விஜயவாடா நகரம் உள்பட கிருஷ்ணா, எலுரு, என்டிஆர், காக்கிநாடா, கோனசீமா மாவட்டங்களில் இந்த நடவடிக்கை அமைதியாகவும், ஒருங்கிணைத்தும் மேற்கொள்ளப்பட்டது.
மாவோயிஸ்ட் இயக்கம் குறித்த தகவல்களைத் தொடர்ந்து மாநில புலனாய்வுத் துறை, சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, மாவட்ட காவல் பிரிவுகள் மற்றும் விஜயவாடா ஆணையரகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றனர்.
தொடர்ச்சியான பாதுகாப்பு அழுத்தம் காரணமாக சத்தீஸ்கரில் உள்ள சுக்மா, பிஜாப்பூர், நாராயண்பூர், மேற்கு பஸ்தர் மாவட்டங்களிலிருந்து நக்சல்கள் பலர் தப்பிச் சென்றதாகவும், அவர்கள் ஆந்திரத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். சோதனைகளின் போது பல்வேறு இடங்களிலிருந்து 39 ஆயுதங்கள், 302 தோட்டாக்கள், டெட்டனேட்டர்கள், கார்டெக்ஸ் வயர், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ரூ. 13 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க; பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கருப்புக் கொடி! கோவையில் 83 பேர் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.