20 ஆவது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, வரும் நவ.21 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா நாட்டுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி20 நாடுகள் பங்கேற்கும், 20 ஆவது ஜி20 உச்சி மாநாடு தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் வரும் நவ.22 ஆம் தேதி துவங்குகின்றது.
இந்த நிலையில், 20 ஆவது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வரும் நவ.21 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறார். இதையடுத்து, ஜி20 மாநாட்டின் மூன்று அமர்வுகளிலும் அவர் உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வரும் நவ.23 ஆம் தேதி வரையிலான பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தில், இந்தியா - பிரேசில் - தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் அவர் பங்கேற்பார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்துடன், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க சிறப்புக் குழு: அயர்லாந்து தூதர் தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.