பிகார் முதல்வர் 
இந்தியா

நல்லாட்சி, அணி மாறும் கலை! நிதீஷ் குமாருக்கு 10 முறை முதல்வர் பதவி சாத்தியமானது எப்படி?

கூட்டணி மாறி மாறி பிகார் முதல்வராக தொடர்ந்த நிதீஷ் குமார், 10வது முறையாக தொடர்ந்து முதல்வரானது எப்படி?

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் முதல்வராக 10வது முறையாக ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார் இன்று பதவியேற்றுக்கொண்டார். இத்தனை காலம் பிகாரின் முதல்வராக நீடிப்பதற்காக, அவர் பல முறை கூட்டணிகளை மாற்றியுள்ளார், கொள்கைகளை வகுத்துக்கொண்டுள்ளார்.

பிகார் மாநிலத்தில் மிகச் சிக்கலான அரசியலமைப்பு மற்றும் சமுதாயப் போக்குகளைத் தாண்டி, நிதீஷ் குமார் முதல்வர் பதவியில் நீடித்து வருவது, அவ்வளவு ஒன்றும் எளிதல்ல. அவரது அரசியல் பயணம், கூட்டணிகளை உருவாக்குதல், மாறிவரும் அரசியல் மாறுபாடுகளுக்கு ஏற்ப தகவமைப்புத் திறனை வளர்த்தல், பிகார் மாநிலத்தின் வேகமான வளர்ச்சி போன்றவை, நவீன கால அரசியல் வரலாற்றிலும் அவரது ஆதிக்கம் கோலோச்சுவதை உறுதி செய்திருக்கிறது.

பிகாரின் வரலாறையும், நிதீஷ் குமாரின் வரலாறையும் பிரிக்க முடியாத அளவுக்கு கால் நூற்றாண்டுகளாக அந்த மண்ணை ஆண்டு வருகிறார். அவரது ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு முறையும் அவர் பிகார் மாநில முன்னேற்றத்துக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

முதல் முறையாக,

கடந்த 2000ஆவது ஆண்டு நிதீஷ் குமார் மார்ச் 3ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார், ஆனால் 7 நாள்களில் அவர் பதவியை இழந்தார்.

கூட்டணி மாறுவதில் வல்லவர்

அவரது ஒட்டுமொத்த அரசியல் வாழ்விலும் அவர் பாஜகவுடனும் மகாகத்பந்தன் கூட்டணியிலும் மாறி மாறி இடம்பெற்றுள்ளார். யாருடன் இணைந்தால் ஆட்சியில் இருக்க முடியுமோ அவர்களுடன் நிதீஷ் இருந்தார் என்று சொல்வதா? நிதீஷ் இருந்தால் அந்த கூட்டணி ஆட்சியில் இருக்கும் என்று சொல்வதா? என்ற விவாதத்தையே அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

1. முதல் முறை பாஜக - சமதா கட்சி கூட்டணி

2. 2005, நவம்பர் 24 - 2010 நவ. 24 : தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் ஆட்சி! முதல் முறையாக ஐந்து ஆண்டுகள் ஆட்சியை பூர்த்தி செய்தார்.

3. 2010, நவ.26 - 2014, மே 17 : தேசிய ஜனநாயகக் கூட்டணி. 2014 மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து நிதீஷ் குமார் பதவியை ராஜிநாமா செய்தார்.

4. 2015, பிப்ரவரி 22 - 2015, நவ. 19 : மகாகத்பந்தன் கூட்டணியில் இணைந்தார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

5. 2015, நவ. 20 - 2017, ஜூலை 27 : மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உடன் ஆட்சியில் இருந்தார்.

6. 2017, ஜூலை 27 - 2020 நவம்பர் : மகாகத்பந்தன் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜகவுடன் இணைந்தார்.

7. 2020 நவம்பர் - 2022 ஆகஸ்ட் : தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து பேரவைத் தேர்தல் வெற்றி பெற்று முதல்வரானார்.

8. 2022, ஆகஸ்ட் - 2024, ஜனவரி : பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி மகாகத்பந்தன் உடன் இணைந்தார்.

9. 2024, ஜனவரி - 2025 நவம்பர் : மீண்டும் கட்சித் தாவுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து 9வது முறையாக பதவியேற்கிறார்.

10. 2025 நவம்பர் 20- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இன்று முதல்வராகியிருக்கிறார்,

கடந்த பத்து முறை, முதல்வராக பதவியேற்க அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து மகாகத்பந்தன் கூட்டணியும், மீண்டும் மகாகத்பந்தன் கூட்டணியிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் மாறியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் இவரை கூட்டணிக் கட்சிகள் முதல்வராக்கி அழகுபார்த்திருக்கிறார்.

பிகாருக்கு என்ன செய்தார்?

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் நல்லாட்சியை வழங்கினார். மாநிலத்தின் உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்தினார். சமூக நலத்திட்டங்களை உருவாக்கி, சட்ட ஆட்சியை நிலைநாட்டினார். இதுவே இத்தனை காலம் இவரை வழிநடத்தி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்திய அரசியலில் நிதிஷ் குமார் போல வளைந்துகொடுத்துச் சென்ற தலைவர்கள் மிகக் குறைவு. கூட்டணி மாறியிருக்கிறார் என்றால் இந்த மாற்றங்கள் ஏதோ தற்செயலானவை அல்ல, அவை அரசியல் சூழல், அவரது கட்சியின் பலம், கூட்டணி, அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு மிகச் சிறப்பாக செய்யப்பட்ட நகர்வுகள் என்கின்றன தரவுகள்.

அவர் நடத்தி வந்த கூட்டணி ஆட்சிகள் அனைத்துமே, அவரது சிறந்த நிர்வாகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. பாஜக அல்லது ராஷ்ட்ரிய ஜனதா தளம் அல்லது காங்கிரஸுடன் இருந்தாலும், நிதிஷ் பெரும்பாலும் ஒரே மாதிரியான கூட்டாளியாக இருந்ததோடு, எப்போதும் தன்னை மையப்படுத்தியே கூட்டணி அமைவது போல பார்த்துக் கொண்டார்.

எந்த ஒரு கட்சியும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தாத பிகார் மாநில சிக்கலான அரசியலமைப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட நிதீஷ் குமார், பிகார் முதல்வராக பத்து முறை பதவியேற்றிருக்கிறார் என்பது வெறும் பதவியைத் தக்கவைத்துக் கொள்வது மட்டுமல்ல, அதையும் தாண்டி, அவரது அரசியல் அனுபவம், ஆட்சித் திறனுக்கான சாட்சியாக அமைந்துள்ளது.

How did Nitish Kumar, who continued to be the Chief Minister of Bihar after changing alliances, become the Chief Minister for the 10th consecutive term?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட வரி எழுதுங்கள்... பூமி பெட்னெகர்!

தெருவுக்கே அவர் பெயர்... யுக்தி தரேஜா!

மணல் காகித மோசடி பற்றி இங்கிலாந்து வீரர் கருத்து... தனது ஸ்டைலில் நக்கலாக பதிலடி கொடுத்த ஸ்மித்!

அடர் சிவப்பில்... கயல் ஆனந்தி!

அனைவரும் கௌதம் கம்பீரையே விமர்சிப்பது ஏன்? பேட்டிங் பயிற்சியாளர் கேள்வி!

SCROLL FOR NEXT