2005ஆம் ஆண்டு பிகார் முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார், தொடர்ச்சியாக முதல்வர் பதவி வகித்து வருகிறார். இன்று 2025ஆம் ஆண்டு 10வது முறையாக பிகார் முதல்வராகப் பதவியேற்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரராக மாறியிருக்கிறார்.
ஆனால், இவரது பிகார் முதல்வர் பதவி என்பது இப்படி ஒன்றுபோல நேர்மறையாகவே இருந்துவிடவில்லை. கடந்த 2000-ஆவது ஆண்டில் முதல் முறையாக பதவியேற்ற நிதீஷ் குமார் 7 நாள்கள் மட்டுமே அதாவது ஒரு வாரத்திலோய முதல்வர் பதவியை இழந்தார். அடுத்து அவர் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆனது.
பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று நடைபெற்ற விழாவில், 10வது முறையாக முதல்வராக பதவியேற்றார் நிதீஷ் குமார், அவருக்கு பிகார் ஆளுநர் பதவிப் பிரமாணமும் ரகசியகாப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிகார் தேர்தலில், பாஜக - ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நாளில் இருந்தே, 10வது முறையாக பிகார் முதல்வராகிறார் என கொண்டாடித் தீர்த்தனவர் அவரது ஆதரவாளர்கள்.
இப்போது, அவரது புகழ் உச்சத்தில் இருப்பதைத்தான் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், உண்மையில் அவரது முதல்வர் பதவி என்ற பாதை அவருக்கு அவ்வளவு எளிதாகத் தொடங்கவில்லை. 2000ஆவது ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது 324 உறுப்பினர்களைக் கொண்ட பேரவைக்கு லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் 124 இடங்களை வென்றிருந்தது. பாஜக - சமதா கட்சி கூட்டணி 122 இடங்களில் வென்றிருந்தது. இரண்டு கட்சிகளுமே பெரும்பான்மை இடங்களான 163 என்ற எண்ணிக்கையைத் தொட வேறு கட்சி ஆதரவு வேண்டும்.
இதற்கிடையே ஆளுநர் வினோத், நிதீஷ் குமாரை அரசமைக்க அழைப்பு விடுத்தார். கூட்டணி கட்சியிலிருந்து 151 உறுப்பினர்கள் மற்றும் சிலரின் ஆதரவோடு மார்ச் 3ஆம் தேதி நிதீஷ் முதல்வராக பதவியேற்றார்.
ஆனால், ராஷ்ட்ரிய ஜனதா தளம், எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்ததால், விட்டுக்கொடுக்கவில்லை. ஒரு வார காலத்துக்குள், இரண்டு அரசியல் கட்சி முகாம்களில் இருந்து எம்எல்ஏக்களை வாங்க சூழ்ச்சி செய்தது.
சூழ்ச்சி பலித்தது. மார்ச் 11ஆம் தேதி நிதீஷ் குமார் ஆட்சி கவிழ்ந்தது. இதன் மூலம் பிகார் வரலாற்றிலேயே, மிகக் குறுகிய காலம் முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெயரை நிதீஷ் குமார் பெற்றார்.
ஆனால், இன்று நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சி, மிகக் குறைந்த கால முதல்வர் என்ற பெயரை மாற்றி, தொடர்ச்சியாக மற்றும் 10வது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்று, முதல் தோல்வியை வெற்றிப் படிகட்டாக மாற்றியிருக்கிறார் என்பதை உறுதி செய்யும் விதமாக உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மகத்தான வெற்றிடன், நன்கறிந்த கூட்டணிக் கட்சிகள் உடனிருக்க, நிதீஷ் குமார், புதிதாக இன்று முதல்வர் பதவியை ஏற்றிருக்கிறார். அவர் தன்னுடைய அரசியல் கால அனுபவங்கள், வரும் காலத்தில் மாநில மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் மாநிலத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசின் ஆதரவோடு வெற்றிப் பயணத்தை இன்று தொடங்குகிறார்.
Why did Nitish Kumar resign as Bihar Chief Minister within a week of taking oath for the first time?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.