பிகார் முதல்வராக பதவியேற்றார் நிதீஷ் குமார் X
இந்தியா

பிகாரில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு! உள் துறையை விட்டுக்கொடுத்த நிதீஷ் குமார்

பிகாரில் புதிய அமைச்சர்களுக்கான இலாக்காகளை முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் புதிய பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கான இலாக்காகளை முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்துள்ளார்.

அதன்படி, துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரிக்கு உள்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் விஜய்குமார் சின்ஹாவுக்கு வருவாய், நில சீர்திருத்தங்கள், சுரங்கம் மற்றும் புவியியல், பிஜேந்திர பிரசாத் யாதவ் - நிதி, எரிசக்தி துறை, சுனில்குமார் - கல்வித் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை பதவியேற்ற 26 அமைச்சர்களில் 18 பேருக்கு மட்டுமே இன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 20ஆண்டுகளாக தம்மிடமே வைத்திருந்த உள் துறையை முதல்முறையாக கூட்டணி கட்சியான பாஜவுக்கு நிதீஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார். பிகாா் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தது.

மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் வியாழக்கிழமை பதவியேற்றாா்.

பாஜக மூத்த தலை​வர் சாம்​ராட் சௌத்​ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்​வர்​களாக பதவி​யேற்றுக் கொண்​டனர். நிகழ்ச்சியில் துணை முதல்​வர்​கள் உள்பட 26 பேர் அமைச்​சர்​களாக பதவி​யேற்​றுக் கொண்​டனர்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

பாஜக​வில் இருந்து 14 பேர், ஐக்​கிய ஜனதா தளத்​தில் இருந்து 8 பேர், ராஷ்ட்ரீய லோக் சக்தி (ராம்வி​லாஸ்) கட்​சி​யில் இருந்து 2 பேர், இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்​சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்​சா​வில் இருந்து தலா ஒரு​வர் அமைச்​சர்​களாக பதவியேற்றனர்.

Bihar Chief Minister Nitish Kumar on Friday allocated portfolios to newly inducted ministers, a day after they were sworn in at a mega event held at the historic Gandhi Maidan in Patna.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் விபத்தில் சிக்கிய மணப்பெண்: மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்

ராஜமௌலியின் வாரணாசி படத்தில் 6 பாடல்கள்!

மீனவர்களுக்கு நெருக்கமானது திராவிட மாடல் அரசு! முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளின் நிலை: அண்ணாமலை கேள்வி

SCROLL FOR NEXT