பெங்களூருவில் ஏடிஎம் வேனில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ரூ. 5.76 கோடி மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கியின் ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக சென்றுகொண்டிருந்த வேனை பின்தொடர்ந்து காரில் சென்ற கும்பல், கடந்த இரண்டு நாளுக்கு முன்னதாக நவ.19 ஆம் தேதி சுமார் ரூ. 7.11 கோடியை கொள்ளையடித்துச் சென்றது.
மதியம் சுமார் 12.48 மணியளவில் அசோகா பில்லர் - ஜெயநகர் டெய்ரி சர்க்கிள் அருகே ரிசர்வ் வங்கியின் இலச்சினையை ஒட்டியிருந்த காரில் வந்த அந்தக் கொள்ளையர்கள், தங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எனக் கூறி, விதிமீறல் நடைபெற்றுள்ளவும், வேனில் இருந்த ஓட்டுநர் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலரை மிரட்டி, ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று வேனை திறந்துள்ளனர்.
அப்போது, வேனில் இருந்த ரூ. 7.11 கோடியை தங்களது காரில் மாற்றிக்கொண்ட கொள்ளையர்கள், வேனின் ஓட்டுநர், காவலரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அதன்பிறகு கொஞ்சதூரம் சென்ற கொள்ளையர்கள், மதியம் 1.16 மணியளவில் டெய்ரி சர்க்கிளில் காரை நிறுத்தி வேன் ஓட்டுநர், காவலரை இறக்கிவிட்டு தப்பினர். இதுதொடர்பாக சித்தாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த, மக்கள் அதிக நடமாட்டும் இருக்கும் பெங்களூரு மையப் பகுதியில் பட்டப்பகலில் ரூ. 7 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து கொள்ளையா்களை கண்டுபிடித்து கைதுசெய்ய தனிப்படை காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்து சுமார் 60 மணி நேரத்துக்குள்ளாகவே மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பெங்களூரு காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், கொள்ளையைடிக்கப்பட்ட பணத்தில் இருந்து ரூ. 5.76 கோடி மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தி கார் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில், கொள்ளையடிக்க பயன்படுத்த வேன் மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பணம் நிரப்பும் பணியில் வேலைப்பார்த்த அனுபவமிக்கவர்கள் கொடுத்த தகவலின் பேரில்தான் கொள்ளை நடைபெற்றதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கண்காணிப்பு கேமராக்கள், கார் சென்ற இடத்தின் வழித்தடங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் 6 முதல் 8 பேர் வரை தொடர்பு இருப்பதாகவும் காவல் துறையினர் சந்திக்கின்றனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.