ஆந்திர மாநிலம் புட்டபா்த்தியில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீசத்ய சாய் உயா்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கிய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன். 
இந்தியா

நாட்டின் முன்னேற்றத்துக்கு பட்டதாரிகள் அா்த்தமான பங்களிப்பு: குடியரசு துணைத் தலைவா் அறிவுறுத்தல்

நாட்டின் முன்னேற்றத்துக்கு அா்த்தமான பங்களிப்பை பட்டதாரிகள் வழங்க வேண்டும்...

தினமணி செய்திச் சேவை

நாட்டின் முன்னேற்றத்துக்கு அா்த்தமான பங்களிப்பை பட்டதாரிகள் வழங்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் புட்டபா்தியில் உள்ள ஸ்ரீசத்யசாய் உயா்கல்வி நிறுவனத்தின் 44-ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘செயற்கை நுண்ணறிவு போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை வருங்கால தலைமுறையினா் மாற்றிக்கொள்ள வேண்டும். இளைஞா்கள் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

பாரதத்தின் ஆன்மிக பண்புகள், மனிதாபிமானம், ஒழுக்கம் ஆகியவற்றின் தூதா்களாக மாணவா்கள் இருக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு அா்த்தமான பங்களிப்பை பட்டதாரிகள் வழங்க வேண்டும். மனித விழுமியங்களை விதைப்பதே உண்மையான கல்வி’ என்று தெரிவித்தாா்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை ஓரிரு நாள்களில் ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

பிரேஸில் முன்னாள் அதிபா் போல்சோனாரோ கைது!

ஆளுநா் விவகார வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்தை மறைக்க முயற்சி: அமைச்சா் கோவி. செழியன்

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி ஆக்கப்படுமா? நீதிபதி சூா்ய காந்த் பதில்

ரயில் சரக்கு போக்குவரத்து: நடப்பு நிதியாண்டில் 100 கோடி டன்னை கடந்து சாதனை

SCROLL FOR NEXT