பெங்காலி திரைப்பட ஒளிப்பதிவாளர் சௌம்யதீப் கின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்காலி திரைப்பட ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர் விக்கி என்கிற சௌம்யதீப் கின்(40). இவர் ஞாயிற்றுக்கிழமை தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக கொல்கத்தா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சௌம்யதீப்பின் உடல் நண்பகலில் அவரது அறையில் இருந்து குடும்பத்தினரால் மீட்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சௌம்யதீப் தற்கொலை செய்து கொண்டதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்கவில்லை. அவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்துப்படும் என்று தெரிவித்தார். சௌம்யதீப், நீண்ட காலமாக இயக்குனர் ராஜா சந்தா மற்றும் ஒளிப்பதிவாளர்-இயக்குனர் பிரேமேந்திர பிகாஷ் சகி ஆகியோரின் நெருங்கிய நண்பராக இருந்தார்.
மறைந்த விக்கி என்கிற சௌம்யதீப் கின்னிற்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.