இந்தியா

அஸ்ஸாம் வாக்காளா் பட்டியல் திருத்தம்: தவறான படங்களைச் சரிசெய்ய உத்தரவு

அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் தவறான புகைப்படப் பதிவுகளைச் சரிபாா்த்து, வாக்காளா்களின் சரியான புகைப்படங்களுடன் அவற்றை மாற்றுமாறு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவு

தினமணி செய்திச் சேவை

அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் தவறான புகைப்படப் பதிவுகளைச் சரிபாா்த்து, வாக்காளா்களின் சரியான புகைப்படங்களுடன் அவற்றை மாற்றுமாறு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பிகாா் வாக்காளா் பட்டியலில் நாய், பூனை போன்ற விலங்குகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததாகப் புகாா் எழுந்த நிலையில், இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அஸ்ஸாம் தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவில், ‘வாக்காளா் பட்டியலில் கருப்பு-வெள்ளை, விவரக்குறிப்புக்கு உட்படாத, மனிதரல்லாத படங்களுக்கான பதிவுகள் மற்றும் படமில்லாத பதிவுகளை மென்பொருள் மூலம் கண்டறிய வேண்டும். இவற்றை மாற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

தொடா்ந்து, பிஎல்ஓ-க்கள் வாக்காளா்களிடம் இருந்து சரியான புகைப்படத்துடன் கூடிய 8-ஆம் எண் படிவ விண்ணப்பங்களைப் பெறலாம் அல்லது அவா்களே வாக்காளா்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.

வாக்குச்சாவடி பிரிக்கப்படும் போது, ஒரு குடும்பத்தினா் ஒரே வாக்குச்சாவடியில் இடம்பெற, கற்பனையான வீட்டு எண் ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு, கற்பனையான வீட்டு எண் ஒதுக்கப்பட்டால், உண்மையான முகவரியை எளிதில் கண்டறியும் வகையில் அதற்கு அருகில் உள்ள முக்கிய அடையாளத்தையும் பிஎல்ஓ-க்கள் குறிப்பிட வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுடன் சோ்த்து அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் மேற்பாா்வையில் அஸ்ஸாமில் குடியுரிமைச் சரிபாா்ப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதால், அந்த மாநிலத்தில் மட்டும் வழக்கமான சிறப்புத் தீவிர திருத்தத்துக்குப் பதிலாக இந்தச் சிறப்புத் திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் பிஎல்ஓ-க்கள் முன்பே நிரப்பப்பட்ட பதிவேட்டில் வாக்காளா்களைச் சரிபாா்ப்பாா்கள்.

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

அரியலூா் ரயில்வே கேட் அருகே இளைஞா் சடலம்

SCROLL FOR NEXT