குவாஹாட்டியில் அலுவலத்திலிருந்து இறந்த நிலையில் பெண் ஊடகவியலாளரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள உள்ளூர் டிஜிட்டல் செய்தித் தளத்தில் ஊடகவியலாளராக பணிபுரிந்து வந்த 27 வயது பெண் அலுவலகத்திற்குள் திங்கள்கிழமை காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட செய்தி வாசிப்பாளரான அந்த பெண்ணுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. வழக்கம்போல் காலை அலுவலத்திற்கு வந்த சக ஊழியர் ஒருவர் அந்த பெண் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே இதுகுறித்து அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார் சடலத்தை மீட்டு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். "இது அனைவருக்கும் நல்லது" என்று எழுதப்பட்ட குறிப்பு ஒன்று சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது.
பெண்ணின் மரணத்தை சந்தேகத்திற்குரிய தற்கொலை என்று கூறி, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார். இதனடையே தடயவியல் குழு சம்பவ இடத்தை பார்வையிட்டது.
உடற்கூராய்வு மற்றும் தடயவியல் பகுப்பாய்வுக்குப் பிறகு மரணத்திற்கான சரியான காரணம் உறுதிப்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.