கோலார்: கர்நாடக மாநிலம் கோலார் அருகே, சபரிமலைக்குப் புறப்பட்ட 4 ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் அதிவேகமாக இயக்கப்பட்டதால், மேம்பால தடுப்பில் மோதி கீழே விழுந்து பயங்கர விபத்து நேரிட்டது.
மாலூர் தாலுகா, அபேனஹல்லி கிராமத்துக்கு அருகே திங்கள்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு நேரிட்ட இந்த விபத்தில் 4 ஐயப்ப பக்தர்களும் பலியானதாகவும், இவர்கள் நால்வரும் நண்பர்கள் என்பதும், கர்நாடகத்திலிருந்து கேரள மாநிலம் சபரிமலைக்குப் புறப்பட்டபோது இந்த விபத்தில் சிக்கி பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தவர், மிக அதிக வேகத்தில் இயக்கியதாகவும், அதனால், மேம்பாலம் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பில் மோதி, கீழே விழுந்து கவிழ்ந்துள்ளது.
காரின் அதிக வேகம் காரணமாக, விபத்து மிக மோசமாக நேரிட்டுள்ளதாகவும், அந்த காரில் இருந்த ஒருவர் கிட்டத்தட்ட 100 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். உடல் கூராய்வு முடிந்ததும் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. அமெரிக்க விசா கிடைக்காததால் பெண் மருத்துவர் தற்கொலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.