சம்பல் பகுதியில் பாதுகாப்பி தீவிரம் 
இந்தியா

சம்பல் வன்முறை நினைவு நாள்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

சம்பல் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் வன்முறை நடைபெற்ற முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி நகரம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், முகலாய ஆட்சியாளா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வின்போது சம்பலின் கோட் கார்வி பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு காரணமாக நான்கு பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

அதிகாரிகள் முழு மாவட்டத்தையும் 19 பாதுகாப்புப் பிரிவுகளாகப் பிரித்து சர்ச்சைக்குரிய மதத் தலமான ஹிந்துபாரா கேடா மற்றும் அஞ்சுமன் திராஹா உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கொடி அணிவகுப்பை நடத்தினர்.

குடியிருப்பாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதே கொடி அணிவகுப்பின் நோக்கம்.  காவல்துறையும் நிர்வாகமும் அவர்களுடன் உறுதியாக நிற்கின்றன என்பதைப் பொதுமக்களுக்கு உறுதியளிப்பதாகும் என்று மாவட்ட நீதிபதி ராஜேந்தர் பென்சியா கூறினார். 

இதனிடையே சம்பல் மாவட்டத்தில் வன்முறை நிகழ்ந்த நாளையொட்டி இன்று நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.

The administration in Uttar Pradesh's Sambhal district remained on high alert on Monday with the town marking the first anniversary of the violence that occurred on the same day last year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-ம் நாளாக கடும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

பாஜகவின் ஊதுகுழலாக இருக்கிறார் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

SCROLL FOR NEXT