ஹைதராபாத்தில் பள்ளி கட்டடத்தில் இருந்து குதித்து 10 ஆம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து 10 ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை குதித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அவர் பலியானார்.
போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு கூராய்வுக்காக செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 15 வயது சிறுமியின் பெற்றோர் மோசமான கல்வி செயல்திறன் குறித்து அதிருப்தி தெரிவித்ததால் மாணவி கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தெலங்கானாவில் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
முன்னதாக நிஜாமாபாத் மாவட்டம், சந்த்ரூரில் உள்ள பள்ளியில் திங்கள்கிழமை 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவர் தனது அறையில் உள்ள இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.