முகப்பு
இந்தியா

மொஹாலி: 10 நாட்களாக சுயநினைவின்றி இருந்த மாணவி ஆம்புலன்ஸில் சென்று தேர்வு எழுதினார்

மொஹாலியில் 10 நாட்களாக சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஆம்புலன்ஸில் சென்று 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 8:47 PM
- கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 8:41 PM

மொஹாலியில் 10 நாட்களாக சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி அவசர ஊர்தியில் (ஆம்புலன்ஸ்) சென்று 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம், மொஹாலியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி கனிஷ்கா பிஷ்த்(17). இவர் கல்சாவில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 8:44 PM

இந்த நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கனிஷ்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 13 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவர் ஆம்புலன்ஸில் சென்று வெள்ளிக்கிழமை (பிப். 20) 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதியிருக்கிறார்.

Advertisement

இதுகுறித்து கனிஷ்காவின் தந்தை பிரேம் சிங் கூறுகையில், எனது மகளுக்கு ஜனவரி 30 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பின்னர் அது கடுமையான நிமோனியா காய்ச்சலாக மாறியது. பஞ்ச்குலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து சண்டீகரில் உள்ள செக்டார் 32 மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 8:44 PM

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 13 நாட்களில், 10 நாட்கள் அவள் சுயநினைவின்றி இருந்தார். உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், கனிஷ்கா தனது தேர்வு எழுதுவதில் உறுதியாக இருந்தார்.

எனது மகள் ஒரு துணிச்சலான பெண். தேர்வு மையத்தில் ஆக்ஸிஜன் ஆதரவு உட்பட அனைத்து மருத்துவ ஏற்பாடுகளும் மருத்துவமனை அதிகாரிகளால் செய்யப்பட்டன என்றார்.

இதனிடையே தேர்வுக்குப் பிறகு, கனிஷ்கா மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டதாக மொஹாலியைச் சேர்ந்த ஜிராக்பூர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.