தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் உமர் உன் நபி செல்லும் இடமெல்லாம் தன்னோடு வெடிபொருளையும் கொண்டு சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்திய நிலையில், மேலும் ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணையில், கார் வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் உமர் உன் நபி எங்கு சென்றாலும் தன்னுடன் ஒரு சூட்கேஸையும் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
மேலும், அந்த சூட்கேஸைத்தான் அவர் வெடிபொருள் தயாரிக்கும் நிலையமாகவும் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. எங்கு சென்றாலும் சூட்கேஸில் ரசாயனச் சேர்மங்கள், கொள்கலன்கள் மற்றும் வெடிபொருள்களை வைத்துக் கொண்டுதான் உமர் உன் நபி சென்று வந்துள்ளார். அவற்றின் மூலம் அவர் இருந்த இடத்திலிருந்தே வெடிகுண்டைத் தயாரிக்கவும் முடியும்.
இதையும் படிக்க: லாக் அப் மரணங்களை பொறுத்துக்கொள்ள முடியாது: உச்ச நீதிமன்றம் காட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.