கோப்புப்படம் ENS
இந்தியா

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் 2ஆம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 99.16% படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் 2ஆம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 99.16% விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வலுவான களப்பணியை எதிரொலிக்கும் வகையில் இது உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்களும், மேற்கு வங்கத்தில் 99.77% படிவங்களும் மத்தியப் பிரதேசத்தில் 99.85% படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யூனியன் பிரதேசங்கள் வாரியாக கோவாவில் 100.00% எஸ்.ஐ.ஆர்., படிவங்களும், லட்சத்தீவில் 100.00% படிவங்களும், அந்தமான் நிகோபர் தீவுகளில் 99.98% படிவங்களும், புதுச்சேரியில் 95.94% படிவங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் - 99.85%, மேற்கு வங்கம் - 99.77%, குஜராத் - 99.73%, தமிழ்நாடு - 96.65%, உத்தரப் பிரதேசம் 99.64% , ராஜஸ்தான் - 99.53%, கேரளத்தில் 97.53% , சத்தீஸ்கர் - 99.23% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

படிவங்கள் பதிவேற்றம்

மேலும், தமிழ்நாட்டில் 58.70% கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கேரளத்தில் 35.90% படிவங்களும், குஜராத்தில் 67.75% படிவங்களும், சத்தீஸ்கரில் 57.88% படிவங்களும், மத்தியப் பிரதேசத்தில் 72.73% படிவங்களும், ராஜஸ்தானில் 78.39% படிவங்களும், மேற்கு வங்கத்தில் 70.14% படிவங்களும், உத்தரப் பிரதேசத்தில் 34.03% படிவங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!

SIR Phase II 99.16 pc enumeration forms distributed across 12 states

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெட் தேர்வு தேர்ச்சி விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்! விஜய்யுடன் நாளை சந்திப்பு!

நாட்டில் அமைதி முக்கியம்; ஆனால், பாதுகாப்பில் சமரசமில்லை - பிரதமர் மோடி

கோவை மாநாட்டில் ரூ.43,844 கோடி முதலீட்டில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

தேர்வு நேரத்தில் எஸ்ஐஆர் பணிகளில் மாணவர்கள்? கேரள அமைச்சர் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT