கோப்புப் படம் 
இந்தியா

சத்தீஸ்கரில் 41 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் 41 மாவோயிஸ்டுகள் சரணடைந்தது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கரில், 12 பெண்கள் உள்பட 41 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

பிஜப்பூரில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 12 பெண்கள் உள்பட 41 மாவோயிஸ்டுகள் இன்று (நவ. 26) மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் சத்தீஸ்கர் காவல் துறை உயர் அதிகாரிகள் முன்னிலை சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சரணடைந்துள்ள 41 மாவோயிஸ்டுகளை கைது செய்ய கூட்டாக ரூ.1.19 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர்கள் அனைவரும் மாநில அரசின் திட்டங்களின் மூலம் தற்போது சரணடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளுக்கு ரூ.50,000 உடனடி நிதியாக வழங்கப்படும் எனவும், அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

முன்னதாக, பிஜப்பூரில் கடந்த ஜனவரி மாதம் முதல் 560 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். மேலும், 528 பேர் கைது செய்யப்பட்டதுடன், 144 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: 1971-க்குப் பின்.. முதல் முறையாக இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை!

41 Maoists surrender in Chhattisgarh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

“இபிஎஸ்-க்கு கார் ஏற்பாடு செய்கிறேன்!” | முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் | DMK | EPS | ADMK

ஸ்டைலு ஸ்டைலுதான்... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

க்ளோஸ்அப்தான், கொஞ்சம்... அபர்ணா தீட்சித்!

அரண்மனைக் கிளி... ஹேலி தாருவாலா!

SCROLL FOR NEXT