ஐஆசிடிசி ஹோட்டல் ஊழல் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய பிகார் முன்னாள் முதல்வர் ராஃப்ரி தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்குமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரின் மனுவை முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி தினேஷ் பட் விசாரித்து, மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு(சிபிஐ) நோட்டீஸ் அனுப்பினார். இருப்பினும் சிபிஐ வழக்கில் நடந்துவரும் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்த தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முன்னதாக, தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ராப்ரி தேவி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். நியாயமான, பாரபட்சமற்ற நீதி வழங்கப்படாது என்று தனக்கு அச்சம் உள்ளதாக அவர் கூறினார்.
பின்னர், நீதிபதி இந்த வழக்கை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு மேல் நடவடிக்கைக்காகப் பட்டியலிட்டார்.
ராஃப்ரி தேவி தாக்கல் செய்த மனு
நிலம், வேலை மற்று ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு உள்பட நான்கு வழக்குகளில் பிகார் முன்னாள் முதல்வர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவற்றைச் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே விசாரித்து வருகிறார்.
முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முன் ராப்ரி தேவி தாக்கல் செய்த மனுவில், சிறப்பு நீதிபதியால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற நீதி வழங்கப்படாது என்ற நியாயமான அச்சம் மனுதாரருக்கு உள்ளது. மேலும், அனைத்து வழக்குகளிலும் சிறப்பு நீதிபதியின் நடத்தை, வழக்கு விசாரணை மற்றும் சார்பு நிலையை நோக்கி தேவையற்ற முறையில் விசாரணை நடத்துவதாகத் தெரிகிறது. இது வழக்கு நடவடிக்கைகளின் பல நிகழ்வுகளிலிருந்து காணப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
சார்புநிலை குறித்த நியாயமான அச்சம் இருப்பதாகவும், நீதியின் நலனுக்காக, வழக்குகளை தகுதிவாய்ந்த அதிகார வரம்பைக் கொண்ட மற்றொரு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்: மு.க. ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.