இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கலச் சிலையைக் நாளை (நவம்பர் 27) கோவாவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார்.
ஒருநாள் பயணமாகக் கர்நாடகம், கோவா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்தவகையில் ஸ்ரீ சமஸ்தான கோகர்ண பர்தகலி ஜீவோத்தம் மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கலச் சிலை, நாளை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராமரின் சிலையை நாளை பிற்பகல் திறந்துவைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து பக்தர்கள், விருந்தினர்களுக்கான தரிசனம் சபா காரியக்ரமம் நடைபெறுகிறது. மடத்தின் 550-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 77 அடி உயர ராமர் சிலை திறக்கப்படுவதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் கூறியுள்ளார்.
பிரதமர் சிறப்பு அஞ்சல் முத்திரை மற்றும் நினைவு நாணயத்தையும் வெளியிடுவார். மேலும் இந்த நிகழ்வில் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கர்நாடகத்தின் உடுப்பில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்திற்குச் சென்று லட்ச காந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர் பங்கேற்று பகவத் கீதையை ஓதுவார்கள் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.