பஞ்சாப், ஹரியாணாவில் பயிர்க் கழிவுகளை எரிப்பதே, தில்லி காற்று மாசுபாட்டுக்குக் காரணம் என்று கருதிவந்த நிலையில், மத்திய புவி அறிவியல் துறை வெளியிட்டிருக்கும் முடிவு ஆதரவு அமைப்பின் தரவுகள் வேறு கதையைச் சொல்கிறது.
தலைநகர் தில்லி, காற்று மாசுபாட்டால் திணறி வரும் நிலையில், அக். 1ஆம் தேதி காற்றின் தரக் குறியீடு சராசரி 130 ஆக இருந்த நிலையில், நவம்பர் 11ஆம் தேதி 428 ஆக உயர்ந்தது. நவ. 26ஆம் தேதி 327 ஆகக் குறைந்தாலும் மிகவும் மோசம் நிலையிலேயே நீடிக்கிறது.
பொதுவாகவே, பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதால்தான், தில்லியில் காற்று மாசு ஏற்படுகிறது என்ற பரவலாக குற்றச்சாட்டு நிலவுகிறது. ஆனால், தீர்வு ஆதரவு அமைப்பின் தரவு அதனை மறுக்கிறது.
அக்டோபர் மாதத்தில் பயிர்க் கழிவுகளுக்கு தீ வைப்பதால் தில்லிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் அக்டோபரில் பயிர்க் கழிவு தீ 2.62 சதவீதம்தான் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், அப்போது தில்லியின் காற்று மாசு அளவு 250.
நவம்பரில் நிலை மேலும் மோசமடைந்தது. பயிர்க்கழிவு தீயால் 22.47 சதவீத பாதிப்பு ஏற்பட்டு, தில்லியின் காற்று மாசு 418 குறியீடுகளைத் தொட்டது.
நவம்பர் மூன்றாம் வாரத்தில் பயிர்க் கழிவு தீ வெகுவாகக் குறைந்தது. ஆனால் காற்று மாசு குறையவில்லை. அதாவது, தில்லி காற்று மாசுவுக்கு பயிர்க் கழிவு எரிப்பு மட்டுமே ஒரே பிரச்னையல்ல, அதுவும் ஒரு பிரச்னை என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்கது.
யார் முக்கிய காரணம்?
தேசியத் தலைநகரை சுற்றியிருக்கும் நகரங்களான கௌதம் புத்தா நகர், குர்கான், கர்னல், மீரட் உள்ளிட்ட நகரங்கள் தில்லி காற்று மாசுவுக்கு 29.5 சதவீதம் காரணமாகின்றன. இதற்கு அடுத்த இடத்தில் போக்குவரத்து உள்ளது. இது 19.7 சதவீதம் காரணம்.
குடியிருப்புகளிலிருந்து வெளியாகும் காற்று மாசு, தொழிற்சாலைக் கழிவுகள், குடியிருப்பு மாசு, ஆகியவையும் இணைந்து தில்லி காற்று மாசுவுக்கு கலந்த கலவையாகக் காரணமாகின்றன.
இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 34.8 சதவீத காற்று மாவுக்குகான காரணமே அறியப்படவில்லை. காரணமே கண்டறியப்படாமல், எவ்வாறு இந்தக் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த முடியும்?
எனவே, தில்லி காற்று மாசுவுக்கு, போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் புகை என அனைத்துமே காரணங்களாகின்றன என்பதோடு, காரணமே அறியப்படாத சில பல விஷயங்களும் இருப்பதும், அதனைக் கண்டறிவதே முதன்மை தீர்வாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. சென்னைக்கு 700 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்! வானிலை மையம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.