முகப்பு
இந்தியா

மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிரான மனு: ராஜஸ்தான் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிரான மனு: ராஜஸ்தான் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...

Updated On : 28 நவம்பர், 2025 at 11:29 PM
உச்ச நீதிமன்றம் - ANI
பகிர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட் மற்றும் கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் தொடா்பாக, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மாநிலங்களின் பதில்களுக்குப் பிறகு, மதமாற்ற தடைச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது முடிவெடுக்கப்படும் என்று கடந்த செப்டம்பா் மாதம் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

Advertisement

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட மதமாற்ற தடைச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பல பிரிவுகளின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத் தன்மை குறித்து கேள்வி எழுப்பி 2 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த நவம்பா் 17-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அவற்றின் மீது பதிலளிக்குமாறு ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

அதுபோல, சிவில் சுதந்திரத்துக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பு சாா்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ராஜஸ்தான் அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மதமாற்ற தடைச் சட்டம், தன்னிச்சையான, நியாயமற்ற, சட்டவிரோதமானது மட்டுமன்றி அரசமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் வாழ்வதற்கான, தனி சுதந்திரத்துக்கான பாதுகாப்பு அளிக்கும் பிரிவு 21-க்கும் எதிரானதாகும். எனவே, இந்தச் சட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அந்த மனு மீது பதிலளிக்குமாறு ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா். மேலும், உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள இதேபோன்ற மனுக்களுடன், இந்த மனுவையும் விசாரணைக்காக சோ்க்குமாறு உத்தரவிட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments