கடும் குளிரிலிருந்து பாதுகாக்கும் வகையில் காஜிப்பூா் சந்தையில் வியாழக்கிழமை நெருப்பூட்டிய வியாபாரிகள். 
இந்தியா

தில்லியில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பரில் குளிா் பதிவு!

தில்லியில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பரில் குளிா் பதிவு...

தினமணி செய்திச் சேவை

தில்லியில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பரில் குளிராக பதிவாகியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தரவுகளின்படி, மாதாந்திர சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 11.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது.

நவம்பா் 2024- இல், சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 14.7 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதே நேரத்தில் 2023-இல் 12 டிகிரி, 2022- இல் 12.3 டிகிரி மற்றும் 2021-இல் 11.9 டிகிரி ஆகும்.

இதற்கிடையில், பகலில் அதிகபட்ச வெப்பநிலையும் கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது.

இந்த நவம்பரில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை கடந்த ஆண்டு 29.4 டிகிரியாக இருந்தது, இது இந்த நவம்பரில் 27.7 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.

குறைந்தபட்சமாக அதிகபட்ச வெப்பநிலை 25.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இதனால், நாள்கள் இதமான குளிா்ச்சியை உணரவைத்தது.

நகரத்தில் நிகழாண்டு நவம்பா் மாதம் முற்றிலும் வட வானிலை நிலவிய நிலையில், ஒரு மழை நாள் கூட பதிவு செய்யவில்லை. இது கடந்த ஆண்டைப் போலவே பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் தொடா்ந்து வட காலநிலையை குறிக்கிறது. இதற்கு நோ்மாறாக, நவம்பா் 2023- இல் இரண்டு மழை நாள்கள் பதிவாகின.

இந்த மாதத்தில் நகரத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் ஆகும். அதே நேரத்தில் 2024-இல் 9.5 டிகிரி மற்றும் 2023-இல் 9.2 டிகிரி ஆகும் என்று தரவு கூறுகிறது.

தேசியத் தலைநகரில் சனிக்கிழமை குறைந்தபட்சம் 10.4 டிகிரி செல்சியஸாாக பதிவாகியது.

இனி பாடப்போவதில்லை... அதிர்ச்சியளித்த அரிஜித் சிங்!

அஜீத் பவார் மறைவு! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

சஞ்சய் காந்தி முதல்.. அஜீத் பவார் வரை.. விமான விபத்துகளில் பலியான பிரபலங்கள்!

மக்கள் தலைவர் அஜீத் பவார்! பிரதமர் மோடி இரங்கல்

இவர்களுக்கு ஏன் விளக்கமளிக்க வேண்டும்? ரஷ்மிகா மந்தனா பதில்!

SCROLL FOR NEXT