முகப்பு
இந்தியா

கர்நாடகம்: ஓய்வுபெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் தற்கொலை

கர்நாடகத்தில் ஓய்வுபெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 29 நவம்பர், 2025 at 4:13 PM
தற்கொலை
பகிர்:

கர்நாடகத்தில் ஓய்வுபெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம் குஷ்தகி வட்டத்தைச் சேர்ந்தவர் எச்.ஒய்.துரை (75). இவர் தனது மகன் வீட்டின் மேல்மாடியில் உள்ள அறையில் இருந்தபோது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தகவல்கிடைத்ததும் கே.டி.ஜே நகர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். நெருங்கிய கூட்டாளிகள் கூறுகையில், துரை மற்றும் அவரது மகன் மட்டுமே வீட்டில் வசித்து வந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, துரையின் மனைவி ஒரு விபத்தில் இறந்தார். அதன் பிறகு அவர் வயது தொடர்பான உடல்நலப் பிரச்னைகளுடன் மனஅழுத்தத்தில் போராடியதாகக் கூறப்படுகிறது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

துரை பல்லாரியில் தனது சேவையைத் தொடங்கி, ஹரப்பனஹள்ளி, தவங்கேரே, குட்லிகி, சித்ரதுர்கா மற்றும் பிற இடங்களில் பணியாற்றி கலபுரகியில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

summary

A retired Deputy Superintendent of Police died by suicide at his home on Saturday, officials said.

முழு கட்டுரையைப் படிக்க →