துபை - ஹைதராபாத் விமானத்தில் பணிப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக மென்பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த 30 வயது மென்பொறியாளர் துபை - ஹைதராபாத் விமானத்தில் வெள்ளிக்கிழமை பயணம் செய்து கொண்டிருந்தபோது, விமானப் பணிப்பெண்ணை தொட்டதாக ஹைதராபாத் விமான நிலைய காவல் ஆய்வாளர் கன்கையா கூறினார்.
மேலும் பயணி அந்த சமயத்தில் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் விமானம் தரையிறங்கியதும் கேப்டன் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.
புகாரின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார் என்று போலீஸார் மேலும் கூறினர்.
இதனிடையே தரையிறங்கிய பிறகு, அந்த பயணி தனது கடவுச்சீட்டை இருக்கையில் தொலைத்துவிட்டதாக கூறியிருக்கிறார். ஊழியர்கள் அதைத்தேடச் சென்றபோது, அவர்களை ஆபாச வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.