ஒடிசாவில் அரசியலமைப்பின் மீது உறுதிமொழி எடுத்து தம்பதியினர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஒடிசா மாநிலம், பெர்ஹாம்பூரைச் சேர்ந்தவர் ப்ரீத்திபன்னா மிஸ்ரா (40). இருவக்கும் பானு தேஜாவுக்கும் (43) கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. இருவரும் அரசியலமைப்பின் மீது உறுதிமொழி எடுத்து திருமணம் செய்துகொண்டனர்.
அதோடு அவர்கள் தாங்களும் ரத்த தானம் செய்து திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினரையும் ரத்த தானம் செய்ய வலியுறுத்தினர். திருமணத் தம்பதியினரின் வேண்டுகோளை ஏற்று விருந்தினரும் ரத்த தானம் செய்தனர். இதன்மூலம் மொத்தம் 18 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டன.
மிஸ்ரா பெர்ஹாம்பூரைச் சேர்ந்தவர். இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதேசமயம், ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவைச் சேர்ந்த தேஜா, பெங்களூருவில் உள்ள வேறொரு நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா தலைநகரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். தங்களின் தனித்துவமான இந்த திருமண விழா மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.