உத்தவ் தாக்கரே கோப்புப் படம்
இந்தியா

இந்தியா-பாக். போட்டியை கண்டு ரசித்த தேசத் துரோகிகள்– உத்தவ் தாக்கரே

துபை சர்வதேச மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை தேசத் துரோகிகள் கண்டு ரசித்ததாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே புதன்கிழமை தெரிவித்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

துபை சர்வதேச மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை தேசத் துரோகிகள் கண்டு ரசித்ததாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே புதன்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் அந்தப் போட்டியைப் பார்க்கவே இல்லை. அதனால் அதைப்பற்றி பேச விரும்பவில்லை.

நான் ஒரு தேசபக்தன் என்பதால் அந்தப் போட்டியை பார்க்கவில்லை. ஆனால் தேசத் துரோகிகள் அந்தப் போட்டியை கண்டு ரசித்தனர்.

பிகாரில் தேர்தல் நடைபெறவுள்ளதால் பிரதமர் அங்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.10,000 வழங்கினார். பிரதமருக்கு பிகாரிலிருந்து இப்படியான கோரிக்கை வந்ததா?. பிகாருக்கு அவ்வாறு உதவுவதால் பொறாமையும் கிடையாது.

தேர்தல் வருகிறது என்பதற்காக அங்கே நீங்கள் ஏமாற்றுகிறீர்கள்.

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

ஆனால் மகாராஷ்டிரா நெருக்கடி இருக்கிறது. அதை நீங்கள் முழுமையாக புறக்கணிக்கிறீர்கள். இது முழுமையான அநீதி. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காணாமல் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர் போட்டியை எதிர்த்து போராட்டமும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shiv Sena (UBT) chief Uddhav Thackeray on Wednesday said that those who are "Deshdrohi" (anti-nationals) have enjoyed the recently held India-Pakistan Asia Cup final, held at Dubai International Stadium.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT