காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாஜகவைக் கண்டு அஞ்சுகிறது : கேரள பாஜக
கேரளத்தில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாஜகவைக் கண்டு அஞ்சுகிறது என பாஜக மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்தது குறித்து...
கேரளத்தில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாஜகவைக் கண்டு அஞ்சுகிறது என பாஜக மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்ததுள்ளார்.
முன்னதாக காங்கிரஸும், ராகுல் காந்தியும் பாஜகவின் 'பி டீம்’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்தார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் கூறுகையில், “இத்தகைய அறிக்கைகள் அரசியல் வசதிக்காக வெளியிடப்படுகின்றன. எங்கள் கட்சியை 'பி டீம்’ என்று சொல்ல யாருக்கு தகுதி இருக்கிறது? இது காங்கிரஸின் திறனுக்கு அப்பாற்பட்டது.
Advertisement
Advertisement
உலகின் மிகப்பெரிய கட்சியாய பாஜக உள்ளது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக முழு பலத்துடன் போட்டியிடும். கேரளத்தில் இந்த முறை நாங்கள் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவோம்.
காங்கிரஸாக இருந்தாலும் சரி; கம்யூனிஸ்ட் கட்சிகளாக இருந்தாலும் சரி. இருவருமே பாஜகவைக் கண்டு அஞ்சுகிறார்கள். திருவனந்தபுரத்தில் நாங்கள் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து தமிழகத்தில் காங்கிரஸ், திமுக மற்றும் கேரளத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய இரண்டும் பாஜகவால் அச்சுறுத்தப்படுவதாக உணரத் தொடங்கியுள்ளன” எனத் தெரிவித்ததார்.
Senior BJP leader Shahnawaz Hussain has said that the Congress and the Communists are afraid of the BJP in Kerala.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.