தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!
உத்தரப் பிரதேசத்தில் 48 மணிநேரத்துக்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது குறித்து...
உத்தரப் பிரதேசத்தில், தசரா பண்டிகையை முன்னிட்டு பரேலி பிரிவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 48 மணிநேரத்துக்கு இணைய சேவைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
பரேலி பிரிவில் உள்ள 4 மாவட்டங்களில், தசரா பண்டிகையை முன்னிட்டு, மதக்கலவரம் ஏற்படாமல் தடுக்க, இன்று (அக். 2) மாலை 3 மணி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 3 மணி வரை சுமார் 48 மணிநேரத்துக்கு இணைய மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் துண்டிக்கப்படுவதாக, உத்தரப் பிரதேசத்தின் உள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி, உள் துறை செயலாளர் கௌரவ் தயாள் வெளியிட்டுள்ள உத்தரவில், முகப்புத்தகம், யூடியூப், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகச் செயலிகள் மூலம் வதந்திகள் பரவி மதக்கலவரங்கள் உருவாகக் கூடும் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பரேலி பிரிவில் உள்ள மாவட்டங்களின் முக்கிய பகுதிகள் மற்றும் தெருக்கள் முழுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு; பாதுகாப்புப் படையினர் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, செப். 26 ஆம் தேதி கொட்வாலி பகுதியில் உள்ள மசூதியின் அருகில் திரண்ட இஸ்லாமியர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு
In Uttar Pradesh, internet services have been temporarily suspended for the next 48 hours in Bareilly division as a precautionary measure ahead of the Dussehra festival.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.