இஸ்ரேலில், ஹைஃபா நினைவு நாள் விழாவில், இந்தியாவின் தேசிய கீதத்தை இஸ்ரேல் காவல் துறையினர் ஒலிப்பரப்பிய விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இஸ்ரேல் நாட்டில், ஹைஃபா போரின் 107 ஆவது நினைவு நாள் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்திய தூதர் ஜே.பி. சிங், ஹைஃபா மேயர் யோனா யாஹவ், இஸ்ரேல் ராணுவத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த விழாவில், இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இஸ்ரேல் - இந்தியா வர்த்தக சபைத் தலைவர் அனாட் பெர்ன்ஸ்டீன் ரீச்சின் சமூக தளப் பக்கத்திலும் இந்த விடியோ பகிரப்பட்டுள்ளது. மேலும், அந்த விடியோவை இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தின் எக்ஸ் தளப் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில், 1918 ஆம் ஆண்டு ஹைஃபா நகரத்தை மீட்க ஜோத்ப்பூர், மைசூர் மற்றும் அப்போதைய ஹைதராபாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்த இந்திய வீரர்கள் பங்கேற்றதாகவும்; அவர்களின் நினைவாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், அப்போது பேசிய இந்தியத் தூதர் ஜே.பி. சிங் கூறியதாவது:
“முதலாம் உலகப் போர் காலத்தில் 74,000-க்கும் அதிகமான இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்றும், ஐ.நா. படைகளில் இந்திய வீரர்கள் இஸ்ரேலில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ராமராக ராகுல்; ராவணனாக அமலாக்கத்துறை..! உ.பி.யில் காங். வெளியிட்ட கேலிச்சித்திரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.